என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆதரவின்றி அனாதையாக இறந்த வடநாட்டு பெண்: நல்லடக்கம் செய்த போலீஸ்-பொதுமக்கள்
    X

    ஆதரவின்றி அனாதையாக இறந்த வடநாட்டு பெண்: நல்லடக்கம் செய்த போலீஸ்-பொதுமக்கள்

    ஆதரவின்றி அனாதையாக சுற்றித்திறிந்த வடநாட்டு பெண் இறந்ததையடுத்து போலீஸ் மற்றும் பொதுமக்கள் அவரை நல்லடக்கம் செய்தனர்.

    முத்தூர்:

    வெள்ளகோவில் பஸ் நிலைய பகுதியில் கடந்த 10 ஆண்டாக ஒரு வடநாட்டு பெண் சுற்றி திரிந்தார்.

    முதுமை வயதான அந்த பெண் அங்குள்ளவர்கள் கொடுக்கும் உணவுவையும், உதவியையும் வைத்து காலம் தள்ளினார்.

    இந்த நிலையில் அந்த ஆதரவற்ற பெண் நேற்று காலை திடீரென இறந்து விட்டார்.

    இது பற்றி தகவல் கிடைத் ததும் வெள்ளகோவில் போலீசார் அந்த பெண் உடலை மீட்டனர். அவர் மீது பரிதாபப்பட்ட அப்பகுதி மக்களும் அங்கு வந்தனர்.

    பிறகு போலீசார் மற்றும் பொதுமக்களும் சேர்ந்து இந்துக்கள் முறைப்படி அந்த பெண்ணின் உடலை நல்லடக்கம் செய்ய முடிவு செய்தனர்.

    அதன்படி அந்த பெண் உடலை குளிப்பாட்டி மாலை போட்டு புது சேலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    இத்தனைக்கு அந்த பெண்ணின் பெயர் கூட அப்பகுதி மக்களுக்கு தெரியாது. மனித நேயத்துடன் செய்த இந்த செயலை மற்றவர்கள் பாராட்டினர்.

    Next Story
    ×