என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் சுதந்திர தினவிழா கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது
    X

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் சுதந்திர தினவிழா கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் சுதந்திர தினவிழா கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. பொது தீட்சிதர்களின் செயலாளர் பட்டு ரத்தின தீட்சிதர் தலைமையில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
    சிதம்பரம்:

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பொது தீட்சிதர்களின் செயலாளர் பட்டு ரத்தின தீட்சிதர் தலைமையில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    பின்னர் நடராஜர் சபையிலிருந்து தேசியக் கொடியை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கீழ ரதவீதி கோவில் கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. தமிழக கோவில்களில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் மட்டும் தான் சுதந்திரதினம், குடியரசு தினம் போன்ற நிகழ்ச்சிகள் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×