என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெய்வேலி அருகே சுரங்கம் அமைத்து நகைக்கடையில் 1½ கிலோ நகை கொள்ளை
    X

    நெய்வேலி அருகே சுரங்கம் அமைத்து நகைக்கடையில் 1½ கிலோ நகை கொள்ளை

    நெய்வேலி அருகே மண்ணுக்குள் குழி தோண்டி சுரங்கம் அமைத்து கடையில் இருந்த நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    நெய்வேலி:

    நெய்வேலி அருகே உள்ள மந்தாரக்குப்பம். கடலூர் மெயின்ரோட்டில் பெட்ரோல் பங்க் எதிரே நகைக்கடை உள்ளது. நேற்று இரவு நகைக்கடை உரிமையாளர் சுரேஷ் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

    இதைநோட்டமிட்ட மர்மநபர்கள் கடையின் பின்பக்கத்தில் இருந்து மண்ணுக்குள் குழி தோண்டி சுரங்கம் அமைத்து கடையினுள்ளே சென்று நகைகளை கொள்ளையடித்து கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.

    இந்நிலையில் இன்று காலை கதவை திறந்து சுரேஷ் உள்ளே சென்றார். அப்போது சுரங்கம் அமைத்து மர்மநபர்கள் கடைக்குள் புகுந்து நகையை கொள்ளையடித்தது தெரியவந்தது.

    அதிர்ச்சியடைந்த சுரேஷ் நகைகளை சரிபார்க்கும் போது 1½ கிலோ தங்க நகைகள், 25 கிலோ வெள்ளிப்பொருட்களை கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து மந்தாரக்குப்பம் போலீசுக்கு புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் ஏதும் கிடைக்கிறதா என்று ஆய்வு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடிச்சென்று திரும்பி வந்தது. போலீசார் வழக்குபதிவு செய்து நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு தான் குறிஞ்சிப்பாடியில் உள்ள என்.எல்.சி.ஊழியர் வீட்டில் 33 லட்சம் ரொக்க பணம் கொள்ளையடித்தனர்.

    இப்போது நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் போலீசாருக்கு கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×