என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகை அருகே மனைவி இறுதி சடங்கில் உயிர் விட்ட கணவர்
    X

    நாகை அருகே மனைவி இறுதி சடங்கில் உயிர் விட்ட கணவர்

    நாகை அருகே மனைவி இறுதி சடங்கின் போது கணவர் உயிர் விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    நாகப்பட்டினம்:

    நாகை அருகே உள்ள தெற்கு பொய்கைநல்லூர் பூக்காரத் தெருவை சேர்ந்தவர் வீரப்பன் (90). இவரது மனைவி ருக்மணி அம்மாள் (85). இவர்கள் வேளாங்கண்ணி மாதா கோவில் அருகே பூக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தனர். இணை பிரியா தம்பதியாக வாழ்ந்து வந்தனர்.

    இந்த நிலையில் முதுமை காரணமாக ருக்மணி அம்மாள் இறந்தார். அவரது இறுதி சடங்கிற்கான பணிகள் நடைபெற்றது.

    அப்போது ஆழ்ந்த துக்கத்துடன் காணப்பட்ட வீரப்பனும் உயிரிழந்தார். மனைவி இறந்த துக்கத்தில் கணவரும் உயிர் இழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    பின்னர் கணவன்-மனைவி இருவரின் இறுதி சடங்குகளும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது.
    Next Story
    ×