என் மலர்tooltip icon

    செய்திகள்

    அந்தியூர் அருகே மனைவியை வெட்டி கொன்ற கணவர் தற்கொலை
    X

    அந்தியூர் அருகே மனைவியை வெட்டி கொன்ற கணவர் தற்கொலை

    மனைவியை நடத்தையில் சந்தேகப்பட்டு வெட்டி கொன்ற கணவனும் தற்கொலை செய்து கொண்டது அந்தியூர் பகுதியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் குருநாத புரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 50). இவரது மனைவி பழனியம்மாள் (46).

    ராமச்சந்திரனுக்கு மனவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதையொட்டி அவர்களிடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்று முன்தினம் இரவும் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்பிறகு இரவில் படுத்து தூங்கிய பழனியம்மாள் கழுத்தில் அரிவாளால் ராமசந்திரன் வெட்டி படுகொலை செய்தார்.

    இதன்பிறகு அங்கிருந்து அவர் தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவம் குறித்து வெள்ளி திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    தப்பி ஓடிய கணவர் ராமச்சந்திரனை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் தப்பி ஓடிய ரவிச்சந்திரன் நேற்று இரவு 8 மணியளவில் வெள்ளி திருப்பூர் அடுத்த புரவிபாளையம் என்ற ஊரில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    குருசாமி என்பவரது வீட்டு அருகே சென்ற போது அங்கிருந்தவர்களிடம் “நான் ராமச்சந்திரன் என் மனைவியை வெட்டி கொன்று விட்டேன். நானும் இப்போது வி‌ஷம் குடித்து விட்டேன்” என்று கூறி கொண்டே வீதியில் மயங்கி விழுந்தார்.

    அவர் மயங்கி விழுந்த பகுதி அம்மாப்பேட்டை போலீஸ் பகுதி என்பதால் அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்தனர்.

    மயங்கி கிடந்த ராமச்சந்திரனை ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் இன்று அதிகாலை 2 மணிக்கு அவர் இறந்தார்.

    வெள்ளி திருப்பூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மனைவியை நடத்தையில் சந்தேகப்பட்டு வெட்டி கொன்ற கணவனும் தற்கொலை செய்து கொண்டது அந்தியூர் பகுதியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×