என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணம்
    X

    ஈரோடு மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணம்

    தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வருகிற 1-ந்தேதி ஈரோடு வருகிறார். 2 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசுகிறார்.
    ஈரோடு:

    1-ந் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு மு.க.ஸ்டாலின் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் அன்று மாலை ஈரோடு வருகிறார். ஈரோடு கொங்கு கலையரங்கில் மாற்று கட்சியில் இருந்தும் மற்றும் புதிதாகவும் பலர் தி.மு.க.வில் சேருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.

    இதன்பிறகு ஈரோடு பெருந்துறையில் ரோட்டில் உள்ள சக்தி சுகர்ஸ் விருந்தினர் விடுதியில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசும் அவர், பிறகு அங்கு தங்கி ஓய்வு எடுக்கிறார். மறுநாள் (2-ந்தேதி) காலை 8 மணிக்கு ஓடாநிலையில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

    இதன்பிறகு மொடக்குறிச்சி அருகே உள்ள வெள்ள பெத்தாம்பாளையத்தில் உள்ள மறைந்த முன்னாள் எம்.எல்.ஏசின்ன சாமி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அவர் மரியாதை செலுத்துகிறார். இதன்பிறகு அன்று மதியம் 2 மணிக்கு அவர் கோவை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

    ஈரோடு வரும் மு.க. ஸ்டாலினுக்கு வரவேற்பு கொடுப்பது தொடர்பாகவும், அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் திரளான தி.மு.க.வினர் கலந்து கொள்வது தொடர்பாகவும் ஈரோடு பெரியார் வீதியில் தெற்கு மாவட்ட தி.மு.க.சார்பில் அவை தலைவர் குமார்முருகேஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி கலந்து கொண்டு பேசினார்.
    Next Story
    ×