என் மலர்tooltip icon

    செய்திகள்

    குறுவை திட்டத்தில் மானியம் வழங்க விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கிய வேளாண் உதவியாளர் சஸ்பெண்டு
    X

    குறுவை திட்டத்தில் மானியம் வழங்க விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கிய வேளாண் உதவியாளர் சஸ்பெண்டு

    குறுவை தொகுப்பு திட்டத்திற்கு மானியம் பெற விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கிய வேளாண்மை உதவியாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
    குத்தாலம்:

    டெல்டா பகுதிகளில் விவசாய பணிகளுக்காக ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் தண்ணீர் திறக்கப்படவில்லை.

    எனவே நிலத்தடி நீரை கொண்டு செய்யப்படும் விவசாயத்திற்கு அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்தது. அதில் ஒரு கட்டமாக தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் நிலத்தடி நீரை கொண்டு எந்திரம் மூலம் நடவு செய்யப்படும் ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் மானியம் அறிவிக்கப்பட்டது.

    நாகை மாவட்டத்தில் குத்தாலம், மயிலாடுதுறை, செம்பனார் கோவில், சீர்காழி மற்றும் கொள்ளிடம், கீழ் வேளூர், திருமருகல் பகுதிகளில் 30 ஆயிரம் ஏக்கருக்கு இவ்வாறு மானியம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஏக்கருக்கு தலா ரூ. 4 ஆயிரம் வீதம் ரூ. 12 கோடி மானியம் அளிக்கப்பட உள்ளது. அதன்படி மானியம் பெற விண்ணப்பம் அளித்த விவசாயிகளிடம் மயிலாடுதுறை அருகே உள்ள கோமல் வேளாண்மை உதவியாளர் கண்ணன் ஏக்கருக்கு ரூ. 500 லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.

    அவர் மீது நாகை கலெக்டர் பழனிச்சாமி நடவடிக்கை எடுத்துள்ளார். அவரது உத்தரவின் பேரில் வேளாண் உதவியாளர் கண்ணனை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சேகர் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார்.
    Next Story
    ×