என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
நீர்பிடிப்பு பகுதியில் மழை: பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
By
மாலை மலர்19 Jun 2016 4:30 AM GMT (Updated: 19 Jun 2016 4:30 AM GMT)

முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கூடலூர்:
கேரளா மற்றும் தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு முன்பு தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இருந்தபோதும் தேனி மாவட்டத்தில் மழை சரிவர பெய்யவில்லை. பெரியாறு அணையின் நீர்மட்டமும் வேகமாக குறைந்து வந்தது. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.
விவசாயிகள் நெல் சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமோ? என ஏக்கத்தில் இருந்தனர். சிலர் நெல் விவசாயத்தை விட்டு கரும்பு சாகுபடி செய்ய தொடங்கினர். இந்நிலையில் நேற்று பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
மேலும் தேனி மாவட்டத்தில் இன்று காலை முதலே லேசான தூறலுடன் சாரல் மழை பெய்து வருகிறது. மழை தொடர வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
பெரியாறு அணையின் நீர்மட்டம் 111.60 அடியாக உள்ளது. நேற்று வரை 150 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இன்று அது 336 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 150 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
வைகை அணைப் பகுதியில் வறட்சியே நீடித்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 27.99 அடியாக உள்ளது. வரத்து ஏதும் இல்லாத நிலையில் மதுரை குடிநீருக்காக மட்டும் 60 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 35.60 அடி. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 78.83 அடியாக உள்ளது. வரத்து இல்லை. திறப்பு 3 கன அடி.
பெரியாறு 35.2 மி.மீ., தேக்கடி 33.4 மி.மீ., சண்முகாநதி 2 மி.மீ. மழை அளவு பதிவானது.

Next Story
×