என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை காரணமாக நிறுத்தப்பட்ட வீராணம் ஏரி தூர்வாரும் பணி மீண்டும் தொடங்கியது
    X

    மழை காரணமாக நிறுத்தப்பட்ட வீராணம் ஏரி தூர்வாரும் பணி மீண்டும் தொடங்கியது

    வீராணம் ஏரி மற்றும் வெள்ளியங்கால் ஓடையை தூர்வாரி பலப்படுத்தும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். மழை காரணமாக நிறுத்தப்பட்ட வீராணம் ஏரி தூர்வாரும் பணி மீண்டும் தொடங்கியது.
    சிதம்பரம்:

    காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் நீர் மட்டம் 47.50 அடியாகும்.

    வீராணம் ஏரி கடலூர் மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ளது. தூர்ந்து போய் உள்ள வீராணம் ஏரியை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து வீராணம் ஏரி மற்றும் வெள்ளியங்கால் ஓடையை தூர்வாரி பலப்படுத்தும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக வீராணம் ஏரியில் நடைபெற்று வந்த தூர்வாரும் பணி நிறுத்தப்பட்டது.

    தற்போது மழைநீர் வடிந்ததால் மீண்டும் வீராணம் ஏரியை தூர்வாரும் பணி தொடங்கி உள்ளது.
    Next Story
    ×