என் மலர்
செய்திகள்

காட்டுமன்னார்கோவில் பகுதியில் மழை: வீராணம் ஏரி தூர்வாரும் பணி நிறுத்தம்
காட்டுமன்னார்கோவில் பகுதியில் மழை நீர் தேங்கி நிற்பதால் வீராணம் ஏரி பகுதியில் நடைபெற்று வந்த தூர்வாரும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
காட்டுமன்னார்கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி கடலூர் மக்களுக்கு முக்கிய நீராதாரமாக உள்ளது.
வீராணம் ஏரி மூலம் 45 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஏரி தூர்ந்து போனதால், தண்ணீரை அதிக அளவில் சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
எனவே வீராணம் ஏரியை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனைத்தொடர்ந்து வீராணம் ஏரியை தூர்வாரி பலப்படுத்த ரூ.40 கோடியும், வெள்ளியங்கால் ஓடையை சீரமைத்து மதில்சுவர் கட்ட ரூ.8 கோடியே 15 லட்சம் நிதியை தமிழக அரசு ஒதுக்கியது.
வீராணம் ஏரியை தூர்வாரும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
லால்பேட்டை, திருச்சின்னபுரம், நத்தமலை, கந்தகுமாரன், கொள்ளுமேடு மற்றும் மேலக்கரை உள்பட பல்வேறு பகுதிகளில் பொக் லைன் எந்திரங்கள் மூலம் வீராணம் ஏரியை தூர்வாரி வந்தனர். வெள்ளியங்கால் ஓடையையும் சீரமைத்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு காட்டு மன்னார்கோவில் பகுதியில் பரவலாக பெய்த கோடை மழை காரணமாக வீராணம் ஏரி தூர்வாரும் பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
கோடை மழை நின்றதையடுத்து கடந்த வாரம் வீராணம் ஏரியை தூர்வாரும் பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீண்டும் தொடங்கினர்.
பணிகள் வேகமாக நடைபெற்று வந்த நிலையில் காட்டு மன்னார்கோவில் பகுதியில் உள்ள லால்பேட்டை, திருச்சின்னபுரம், நத்தமலை, கொள்ளுமேடு, கந்தகுமாரன் ஆகிய கிராமங்களில் திடீரென பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக அங்கு மழை நீர் தேங்கி நிற்பதால் வீராணம் ஏரி பகுதியில் நடைபெற்று வந்த தூர்வாரும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் மேலக்கரை பகுதியில் மழை பெய்யாத காரணத்தால், அங்கு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Next Story