என் மலர்
செய்திகள்

அரசு பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் தனியார் பள்ளியில் படிக்க நிதியுதவி: கலெக்டர் தகவல்
அரசு பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் தனியார் பள்ளியில் படிக்க நிதியுதவி வழங்கப்படும் என நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி கூறியுள்ளார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசுப் பள்ளிகளில் பயின்று பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் பிற்படுத்தப்பட்ட சிறுபாமையினர் வகுப்பைச் சேர்ந்த 3 மாணவர்கள், 3 மாணவியர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த 2 மாணவர்கள், 2 மாணவியர்கள் ஆக மொத்தம் 10 மாணவ– மாணவியரைத் தேர்வு செய்து அவர்கள் விரும்புகின்ற தமிழகத்திலுள்ள தலைசிறந்த தனியார் பள்ளிகளில் 11–ஆம் வகுப்பில் சேர்ந்து மேல்நிலைக்கல்வி பெற ஏதுவாக அரசால் நிதியுதவி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் உதவிபெற விரும்பும் மாணவ மாணவியர்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூபாய் 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் ஒரு மாணவருக்கு உயர்ந்தபட்சமாக ஆண்டுக்கு ரூ.28 ஆயிரத்துக்கு மிகாமல் இரண்டாண்டுகளுக்கு ரூ.56 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது.
தகுதியுடைய மாணவ–மாணவியர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story