என் மலர்tooltip icon

    செய்திகள்

    என்.எல்.சி.ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் குறித்து நாளை ஆலோசனை
    X

    என்.எல்.சி.ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் குறித்து நாளை ஆலோசனை

    பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் என்.எல்.சி.ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்வது குறித்து நாளை ஆலோசனை நடத்தவுள்ளனர்.

    நெய்வேலி:

    நெய்வேலி என்.எல்.சி. பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணிபுரியும் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களை உச்சநீதிமன்ற ஆணைப்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சுங்கத்துறை சட்டத்தின்படி பஞ்சப்படி வழங்க வேண்டும் என்பது உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. நிர்வாகத்திடம் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் கடந்த ஏப்ரல் 14–ம் தேதி வேலை நிறுத்த போராட்ட நோட்டீஸ் அளித்தது.

    இது தொடர்பாக சென்னை சாஸ்திரி பவனில் 20–ந் தேதி பேச்சுவார்த்தை நடந்தது.

    கூட்டத்தில் என்.எல். சி.நிர்வாகம் தரப்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து நேற்று சென்னை சாஸ்திரி பவனில் மத்திய தொழிலாளர் துறை அலுவலகத்தில் உதவி கமிஷனர் அண்ணாதுரை முன்னிலையில் மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.

    இதில் நிர்வாகம் தரப்பில் மனிதவள மேம்பாடு கூடுதல் பொதுச் செயலாளர் திருகுமாரும், ஒப்பந்த தொழிளாலர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் சேகர் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். 3 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

    இதுகுறித்து ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் சேகர் நிருபரிடம் கூறியதாவது:–

    என்.எல்.சி.நிர்வாகத்தில் பிடிவாதத்தால் பேச்சுவார்தை தோல்வி அடைந்தது. மறு பேச்சுவார்த்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அடுத்தக்கட்ட பேச்சுவார்தை தொழிலாளர் கமிஷனர் முன்னிலையில் நடத்தப்படும். மேலும் நாளை (29–ந்தேதி) நெய்வேலியில் தொழிலாளர் சங்கத்தில் பேரவைக் கூட்டம் நடைபெறும். அந்த கூட்டத்தில் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் உள்ளிட்ட முக்கிய முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×