என் மலர்
செய்திகள்

மேல்மருவத்தூர் அருகே கல்குவாரியில் கொத்தடிமைகளாக வேலை செய்த 10 பேர் மீட்பு
மேல்மருவத்தூர் அருகே கல்குவாரியில் கொத்தடிமைகளாக வேலை செய்த 10 பேர் மீட்கப்பட்டனர்.
மதுராந்தகம் :
மேல்மருவத்தூரை அடுத்த கிளியாநகரை சேர்ந்தவர் முருகன் (வயது 47). கல்குவாரி நடத்தி வந்தார். அங்கு கொத்தடிமைகளாக பலர் வேலை செய்வதாக மதுராந்தகம் ஆர்.டி.ஓ. பர்கத் பேகத்திற்கு ரகசிய தகவல் கிடத்தது. அவர் அந்த கல்குவாரிக்கு சென்று ஆய்வில் ஈடுபட்டார்.
அப்போது அங்கு திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகாவை சேர்ந்த வெங்கடேசன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் குமார் (16), கணேசன் (6), வேலு (4), மகள் ஜெயந்தி (11) மற்றும் காஞ்சீபுரம் மாவட்டம் வெங்கச்சேரியை சேர்ந்த சாந்தி (35), மகன்கள் சங்கர் (19), சரத் (10), தேன்மொழி (16) ஆகியோர் கொத்தடிமைகளாக வேலை செய்தது தெரியவந்தது.
ஆர்.டி.ஓ. பர்கத் பேகம் அவர்களை மீட்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தார்.

Next Story