என் மலர்

  செய்திகள்

  வேலூரில் மீண்டும் வெயில் தாக்கம் அதிகரிப்பு: பொதுமக்கள் அவதி
  X

  வேலூரில் மீண்டும் வெயில் தாக்கம் அதிகரிப்பு: பொதுமக்கள் அவதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேலூர் மாவட்டத்தில் அக்னி வெயில் மீண்டும் சுட்டெரிப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

  வேலூர்:

  வேலூர் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பு இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதிக பட்சமாக 111 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

  அக்னி நட்சத்திரம் கடந்த 4–ந் தேதி தொடங்கியது. வெயில் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று கருதி பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே நடமாட வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. ஆனால் எதிர்பார்த்தபடி, வெயிலின் தாக்கம் அதிகமாக இல்லை.

  அதற்கு மாறாக, கடந்த 16–ந் தேதி முதல் வேலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. நேற்று முன்தினம் காலை வரை மழை நீடித்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்தது என்பதை விட மறைந்தது என்று பொதுமக்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

  கோடை வெப்பம் இனி சில வாரங்களுக்கு வாட்டி வதைக்காது என்ற நம்பிக்கையிலும் இருந்தனர். இந்த நிலையில் அக்னி வெயிலின் தாக்கம் மீண்டும் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் நேற்று 102 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் மீண்டும் வீடுகளிலேயே முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

  காலையில் சூரியன் உதிக்கும் போதே வெப்பம் அதிகமாக உள்ளது. மதிய நேரங்களில் வெயில் தாக்கம் படிபடியாக அதிகரித்து சுட்டெரிக்கிறது. இதனால் பெரும்பாலானோர் வெளியில் செல்லும் போது முகம் மற்றும் தலையை துணியால் மூடி மறைத்தபடி வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்கின்றனர்.

  நேற்றை விட இன்றைக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

  Next Story
  ×