என் மலர்
செய்திகள்

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் திருநங்கைக்கு செயற்கை மார்பக அறுவை சிகிச்சை
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ஆலங்குளம் திருநங்கைக்கு செயற்கை மார்பக அறுவை சிகிச்சை பொருத்தினர்.
கோவில்பட்டி:
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் பறும்பு பகுதியை சேர்ந்தவர் சுகந்தி(வயது 27). திருநங்கையான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் செயற்கை மார்பகம் பொருத்தியுள்ளார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வலியால் வேதனைப்பட்டு வந்த சுகந்தி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அங்கு அவருக்கு ஏற்கெனவே பொருத்தபட்டுள்ள செயற்கை மார்பகத்தை அகற்றி விட்டு புதிய செயற்கை மார்பகம் பொருத்த வேண்டும் என டாக்டர் பிரபாகரன் கூறினார்.
இதை தொடர்ந்து சுகந்தி கடந்த ஏப்ரல் மாதம் 29–ந் தேதி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கபட்டார். அவருக்கு போதுமான மருத்துவ பரிசோதனை மற்றும் உடற்கூறுகள் ஆய்வறிக்கைக்குப் பின்னர் நேற்று செயற்கை மார்பகம் பொருத்துவதற்கான அறுவை சிகிச்சை நடைபெற்றது.
மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன் முன்னிலையில் டாக்டர் பிரபாகரன், மயக்க மருந்து நிபுணர் சுகிர்தராஜ், செவிலியர்கள் சுஜாதா, சுலோச்சனா ஆகியோர் அடங்கிய குழுவினர் அறுவை சிகிச்சை செய்தனர். இதில் திருநங்கை சுகந்திக்கு ஏற்கனவே பொருத்தப்பட்ட செயற்கை மார்பகத்தை அகற்றி விட்டு புதிய சிலிகான் மார்பகத்தை பொருத்தினர்.
அறுவை சிகிச்சைக்குப்பின் சுகந்தி நலமாக இருப்பதாகவும், அவருக்கு தொடர்ந்து 3 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
திருநங்கை சுகந்திக்கு அறுவை சிசிச்சை செய்த டாக்டர் பிரபாகரன் கூறியதாவது:–
தமிழகத்தில் திருநங்கைகளுக்கு செயற்கை மார்பக அறுவை சிசிச்சை செய்யும் வசதி சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ளது. அதற்கு அடுத்ததாக கோவில்பட்டியில் தான் இந்த வசதி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ஆணை பெண்ணாக மாற்றும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து முதன் முறையாக செயற்கை மார்பகம் பொறுத்தியுள்ளோம். இதற்கான சிலிகான் மார்பகங்களை சென்னையில் இருந்து திருநங்கைகள் வாங்கி வந்தனர். அதை நாங்கள் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தினோம். திருநங்கைகளுக்கான அறுவை சிகிச்சைகளுக்கு அரசு உதவித் தொகை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story