என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோர்ட்டு தடையை மீறி சுடுகாட்டில் பெண் உடலை எரித்த மகன்–3 பேர் கைது
    X

    கோர்ட்டு தடையை மீறி சுடுகாட்டில் பெண் உடலை எரித்த மகன்–3 பேர் கைது

    மடிப்பாக்கத்தில் கோர்ட்டு தடையை மீறி சுடுகாட்டில் பெண் உடலை எரித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    மடிப்பாக்கம் ஷீலா நகரில் உள்ள சுடுகாடு, குடியிருப்பு பகுதியில் உள்ளதால் அதை செயல்படுத்தக் கூடாது என்று சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இதில் ஷீலாநகரில் உள்ள சுடுகாட்டை செயல்படுத்தக் கூடாது என்று கடந்த ஆண்டு கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து சுடுகாட்டுக்கு சீல் வைக்கப்பட்டு கோர்ட்டு உத்தரவை போர்டில் ஒட்டி வைத்திருந்தனர்.

    இந்த நிலையில் மடிப்பாக்கத்தை சேர்ந்த வத்சலா (84) என்ற மூதாட்டி இறந்தார். அவரது உடலை எரிக்க மடிப்பாக்கம் ஷீலாநகர் சுடுகாட்டுக்கு கொண்டு வந்தனர்.

    சுடுகாட்டு கதவு பூட்டை உடைத்து அத்துமீறி நுழைந்தனர். அவர்களை தடுத்த போலீஸ்காரரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    ஆனால் அதையும் மீறி சுடுகாட்டுக்குள் சென்று வத்சலா உடலை எரித்தனர்.

    இதுகுறித்து 14-வது மண்டல இளநிலை பொறியாளர் பாலாஜி, மடிப்பாக்கம் போலீசில் வழக்குப்பதிவு செய்து வத்சலாவின் மகன் ரமேஷ், உறவினர்கள் ஆனந்தன், ஹேமசந்திரசேகர், ஸ்ரீதர் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
    Next Story
    ×