என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாம்பரம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அண்ணன் விபத்தில் பலி
    X

    தாம்பரம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அண்ணன் விபத்தில் பலி

    தாம்பரம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அண்ணன் விபத்தில் பலியானார், இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    தாம்பரம்:

    சென்னையை அடுத்த தாம்பரம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர் ராஜா. இவரது அண்ணன் வாசுரெட்டியார் (வயது82). இவர் பழைய தாம்பரம் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வந்தார்.

    நேற்று காலை அவர் முடிச்சூர் சாலை குளக்கரை அருகே ரோட்டை கடக்க தடுப்பு சுவர் ஓரமாக நடந்து சென்றார். அப்போது பெருங்களத்தூரில் இருந்து தாம்பரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற சிவசந்திரன் கண்ணிமைக்கும் நேரத்தில் வாசுரெட்டியார் மீது மோதினார்.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த வாசுரெட்டி யாரை மீட்டு சிகிச்சைக்காக வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சிவசந்திரனை கைது செய்தனர்.

    Next Story
    ×