என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்திய பெண் கைது
    X

    சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்திய பெண் கைது

    சென்னை விமான நிலையத்தில் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து தங்கம் கடத்திய பெண்ணை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    ஆந்திர மாநிலம் ராஜம்பேட்டை பகுதியைச் சேர்ந்த லட்சுமிதேவி (38) என்ற பெண் சுற்றுலா விசாவில் குவைத்து சென்றுவிட்டு சென்னை திரும்பினார்.

    இன்று அதிகாலை விமானத்தில் வந்த அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது லட்சுமிதேவி தனது உள்ளாடை மற்றும் கைப்பையினுள் 25 தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்தார். இதனை அதிகாரிகள் கண்டு பிடித்து பறிமுதல் செய்து லட்சுமிதேவியை கைது செய்தனர்.

    100 கிராம் எடை கொண்ட தங்க கட்டிகளின் மதிப்பு ரூ. 75 லட்சம் ஆகும். தங்க கடத்தலில் பிடிபட்ட லட்சுமிதேவி குருவியாக செயல்பட்டாரா? அல்லது கடத்தல் கும்பலை சேர்ந்தவரா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
    Next Story
    ×