என் மலர்tooltip icon

    செய்திகள்

    17 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் புவனகிரி தொகுதி வாக்குப்பதிவுக்கு 2 மின்னணு எந்திரங்கள்
    X

    17 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் புவனகிரி தொகுதி வாக்குப்பதிவுக்கு 2 மின்னணு எந்திரங்கள்

    புவனகிரி தொகுதியில் 17 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் அங்கு மட்டும் 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.

    புவனகிரி:

    கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளில் அதிகபட்சமாக புவனகிரி தொகுதியில் 17 வேட்பாளர்களும், குறைந்த பட்சமாக காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதியில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

    16–ந் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் நோட்டா சின்னம் உள்பட 16 சின்னங்கள் மட்டுமே பொருத்த முடியும்.

    புவனகிரி தொகுதியில் 17 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் அங்கு மட்டும் 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இதர தொகுதிகளில் ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்படும்.

    இந்த முறை மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளரின் படமும் இடம் பெற உள்ளது.

    இதுதவிர எந்த கட்சிக்கு ஒட்டுப்போட்டோம் என்பதை வாக்காளர்கள் அறியக்கூடிய வசதி கடலூர் சட்டசபை தொகுதியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    Next Story
    ×