என் மலர்
செய்திகள்

கடும் வெயில் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது
கடும் வெயில் காரணமாக நேற்று மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்தது. கடற்கரை கோவில் வெறிச்சோடி காணப்பட்டது.
மாமல்லபுரம், ஏப்.18-
கோடை வெயில் கடந்த 2 நாட்களாக அதிகமாக உள்ளதால் மாமல்லபுரம் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்படுகிறது.பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். கடும் வெயிலால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக இருந்ததால் மாமல்லபுரம் ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோவில் போன்ற முக்கிய இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
வெயிலின் தாக்கம் குறைந்த பின்னரே பயணிகளின் வருகை படிப்படியாக அதிகரிக்கும் என்று தெரிகிறது.
நேற்று கடும் வெயில் காரணமாக பயணிகள் கூட்டம் இல்லாததால் கடற்கரை கோவிலின் பிரதான நுழைவு வாயிலில் உள்ள பசுமை புல் வெளிகளில் காகங்கள் மட்டுமே இரை தேடி கொண்டிருந்தன.

Next Story