என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சியில் நாளை மறுநாள் நடக்கும் ஜெயலலிதா பொதுக்கூட்டத்துக்கு பிரமாண்ட ஏற்பாடு
    X

    காஞ்சியில் நாளை மறுநாள் நடக்கும் ஜெயலலிதா பொதுக்கூட்டத்துக்கு பிரமாண்ட ஏற்பாடு

    காஞ்சீபுரத்தை அடுத்த வாரணவாசி பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நாளை மறுநாள் (18–ந் தேதி) பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
    காஞ்சீபுரம்:

    உத்திரமேரூர் தொகுதிகுட்பட்ட பகுதியில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிரசாரத்திற்காக பிரம்மாண்டமான மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் மேடை அருகே ஹெலிபேட் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. பிரசாரம் மாலை நடைபெறுவதால் ஒளிதரும் பிரம்மாண்டமான மின் விளக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. லட்சக்கணக்கான மக்கள் கூடும் நிலையில் பொது மக்களை சீராக வரிசையில் கூட்ட அரங்கிற்குள் அனுமதிக்க பல்வேறு இடங்களில் கட்டைகளால் தடுப்பு அமைக்கப்பட்டு வருகின்றன.

    இப்பணிகளை காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளருமான வாலாஜாபாத் பா.கணேசன் மற்றும் தேர்தல் பணிக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    42 ஏக்கர் பரப்பளவில் உள்ள பிரம்மாண்ட மைதானத்தில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் காஞ்சீபுரம், திருவள்ளுர், திருவண்ணாமலை மாவட்டத்தில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் 18 பேரை முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தி வாக்குகள் சேகரிக்கிறார்.

    முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் வருகையை யொட்டி காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு பணிகளை கவனித்து வருகிறார்கள்.

    Next Story
    ×