என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பாவூர்சத்திரம் அருகே காரில் 250 கிலோ குட்கா கடத்தல்- 2 பேர் கைது
- பாவூர்சத்திரம் அருகே அரசு பள்ளி அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்ற காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
- பாவூர்சத்திரம் கல்லூரணி பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தென்காசி:
தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பாவூர்சத்திரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாவூர்சத்திரம் அருகே அரசு பள்ளி அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்ற காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் தேக்கனிகோட்டை பகுதியை சேர்ந்த கோவிந்தன் (வயது 33), பாவூர்சத்திரம் அருகே உள்ள வடக்கு கொண்டலூரை சேர்ந்த வேல்முருகன் (27) என்பதும், காரில் 250 கிலோ குட்கா இருந்ததும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து 2 பேரையும் கைது செய்த போலீசார் குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இவர்களுடன் தொடர்புடைய பாவூர்சத்திரம் கல்லூரணி பகுதியை சேர்ந்த ஜெயராமன் (28) என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.






