search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    12 இடங்களில் சதமடித்த வெயில்: இன்று சென்னையில் அதிகபட்ச வெப்பம் பதிவு
    X

    12 இடங்களில் சதமடித்த வெயில்: இன்று சென்னையில் அதிகபட்ச வெப்பம் பதிவு

      தமிழகம் முழுவதும் இன்று 12 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக சென்னையில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது. நடப்பாண்டில் சென்னையில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை இதுவாகும்.

      ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசியது

      இதனையடுத்து தமிழகத்தில் மே மாதத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்தது. இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சி நிலவியது.

      இந்நிலையில் வங்கக்கடலில் உருவான ரீமால் புயல் நேற்று வங்கதேசம் அருகே கரையை கடந்தது. இதனால் மீண்டும் தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இனிவரும் நாட்களில் தமிழகத்தில் வெப்பநிலை 2-3 டிகிரி அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

      மே 4 அன்று தமிழ்நாட்டில் தொடங்கிய கத்திரி வெயில் இன்றுடன் முடிவடைந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

      தமிழ்நாட்டில் இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவான இடங்கள் பின்வருமாறு:-

      சென்னை மீனம்பாக்கம் - 106, சென்னை நுங்கம்பாக்கம் - 106, திருத்தணி - 104, வேலூர் - 104, திருப்பத்தூர் - 102, மதுரை நகரம் - 101, பரங்கிப்பேட்டை - 101, மதுரை விமான நிலையம் - 101, புதுச்சேரி - 101, நாகப்பட்டினம் - 101, தஞ்சாவூர் - 100, கடலூர் - 100 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

      சுற்றுலா தளங்களில் பதிவான வெப்பநிலை விவரங்கள் பின்வருமாறு:-

      குன்னூர் - 77, கொடைக்கானல் - 73.04, ஊட்டி - 73, வால்பாறை - 75.2

      Next Story
      ×