search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காற்றாலை மூலம் 1,190 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி: எரிசக்தி துறை அதிகாரிகள்
    X

    காற்றாலை மூலம் 1,190 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி: எரிசக்தி துறை அதிகாரிகள்

    • காற்றலை மின்சார உற்பத்தி அதிகரித்து இருப்பதால் தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் தடையற்ற மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.
    • வீடுகளில் அறைகளில் பயன்படுத்தப்படும் ஏசியின் பயன்பாடு காலநிலை மாற்றத்தால் தற்போது சற்று குறைந்து உள்ளது.

    சென்னை:

    இந்திய அளவில் காற்றாலை மின்சார உற்பத்தியில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி, பல்லடம், உடுமலை, தேனி உள்ளிட்ட இடங்களில் 8 ஆயிரத்து 894 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 11 ஆயிரத்து 800 காற்றாலைகள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் காற்றாலை மின்சார உற்பத்தி ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இருக்கும்.

    இந்த காலகட்டத்தில் சராசரியாக 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தினசரி உற்பத்தி செய்வது வழக்கம். அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவ மழை தொடங்கிவிடும் என்பதால் எதிர்பார்த்த அளவு காற்றின் வேகம் அதிகம் இருக்க வாய்ப்பு இல்லை.

    புயல் மையம் கொண்டால் மட்டும் சம்பந்தப்பட்டப் பகுதிகளில் மட்டும் காற்றின் வேகம் இருக்கும். அப்பகுதிகளில் காற்றாலைகள் இருந்தால் மட்டும் மின்சார உற்பத்தி நடக்கும். தற்போதைய நிலையில் காற்றாலை சீசன் நிறைவடைந்தத நிலையில் ஒரு சில பகுதிகளில் காற்றின் வேகம் இருப்பதால் நேற்றுமுன்தினம் காலை 7.50 மணி நிலவரப்படி 1,190 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

    காற்றலை மின்சார உற்பத்தி அதிகரித்து இருப்பதால் தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் தடையற்ற மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. சராசரியாக தற்போது 3 ஆயிரத்து 800 முதல் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    அதேபோல், சோலார் மூலம் 7 ஆயிரத்து 134 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் கொள்திறன் உள்ளது. அதன்படி 4 ஆயிரத்து 314 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. காற்றாலைகள் மற்றும் சோலார் மின்சாரம் உற்பத்தி இருப்பதால் மின்வெட்டு செய்யப்படாமல் தேவைக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.

    வீடுகளில் அறைகளில் பயன்படுத்தப்படும் ஏசியின் பயன்பாடு காலநிலை மாற்றத்தால் தற்போது சற்று குறைந்து உள்ளது. மின்சாரத்தின் தேவையும் சற்று குறைந்து இருப்பதால் அனல் மின்சார நிலையங்களில் நிலக்கரியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மின்சார உற்பத்தி சராசரியாக 2 ஆயிரத்து 400 மெகாவாட் என்ற அளவில் உற்பத்தியும் குறைக்கப்பட்டு உள்ளது என்று எரிசக்தித்துறை அதிகாரிகள் கூறினர்.

    Next Story
    ×