search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    உலக மகளிர் குத்துச்சண்டை: இறுதிப்போட்டியில் வியட்நாம், ஆஸ்திரேலியாவுடன் மோதும் இந்திய வீராங்கனைகள்
    X

    உலக மகளிர் குத்துச்சண்டை: இறுதிப்போட்டியில் வியட்நாம், ஆஸ்திரேலியாவுடன் மோதும் இந்திய வீராங்கனைகள்

    • 48 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில், அரியானாவை சேர்ந்த நிது கங்காஸ் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
    • இந்திய வீராங்கனைகள் லவ்லினா, நிகாத் ஜரீன் வெற்றி பெற்று சாதனை படைப்பார்களா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

    டெல்லியில் பெண்களுக்கான 13வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இதில் 50 கிலோ உடல் எடைப்பிரிவில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் நடப்பு உலக சாம்பியனான இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன், 2 முறை ஆசிய சாம்பியனான நுயென் திம் தாமுடன் (வியட்நாம்) மோதுகிறார்.

    இதேபோல் 75 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை லவ்லினா, கேட்லின் பார்கெரை (ஆஸ்திரேலியா) சந்திக்கிறார்.

    இதனிடையே நேற்று நடந்த 48 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில், அரியானாவை சேர்ந்த 22 வயதான நிது கங்காஸ் 5-0 என்ற கணக்கில் லட்சைகான் அடலாண்செட்செக்கை(மங்கோலியா) தோற்கடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம் உலக குத்துச்சண்டையில் சாம்பியன் பட்டம் வென்ற 6-வது இந்தியர் என்ற பெருமையை நிது கங்காஸ் பெற்றார்.

    அதே போல் 81 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் அரியானாவை சேர்ந்த 30 வயது வீராங்கனை சவீட்டி பூரா, 4-3 என்ற கனக்கில் வாங் லினாவை(சீனா) சாய்த்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். இதன் மூலம் உலக குத்துச்சண்டையில் தங்கம் வென்ற 7-வது இந்தியர் என்ற சிறப்பை பெற்றார்.

    இதனைத் தொடர்ந்து இன்று நடைபெறும் போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் லவ்லினா, நிகாத் ஜரீன் வெற்றி பெற்று சாதனை படைப்பார்களா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

    Next Story
    ×