என் மலர்
டென்னிஸ்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் மொனாக்கோ வீரர்
- ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.
- இதில் பிரான்சின் ஆர்தர் ரிண்டர்நெக் இறுதிச்சுற்றில் தோல்வி அடைந்தார்.
பீஜிங்:
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் ஆர்தர் ரிண்டர்நெக், மொனாக்கோ வீரர் வாலண்டைன் வசெரோட் உடன் மோதினார்.
இதில் வசெரோட் முதல் செட்டை இழந்தாலும், 2 மற்றும் 3வது செட்டைக் கைப்பற்றினார்.
இறுதியில் வசெரோட் 4-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார்.
Next Story






