என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    ஹாலே ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் ரூப்லெவ் அதிர்ச்சி தோல்வி
    X

    ஹாலே ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் ரூப்லெவ் அதிர்ச்சி தோல்வி

    • ஜெர்மனியில் ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • இரண்டாவது சுற்றில் ரஷியாவின் ரூப்லெவ் தோல்வி அடைந்தார்.

    பெர்லின்:

    ஆண்கள் மட்டும் பங்கேற்கும் ஹாலெ ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது இரண்டாவது சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.

    ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், அர்ஜெண்டினாவின் தாமஸ் மார்டின் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய தாமஸ் மார்டின் 6-3, 6-7 (4-7), 7-6 (8-6) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் ரஷியாவின் ரூப்லெவ் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    Next Story
    ×