என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    5.30 மணி நேரம் போராட்டம்: ஸ்வெரேவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குக்கு முன்னேறினார் அல்காரஸ்
    X

    5.30 மணி நேரம் போராட்டம்: ஸ்வெரேவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குக்கு முன்னேறினார் அல்காரஸ்

    • முதல் இரண்டு செட்களை அல்காரஸ் வென்றபின், அடுத்த இரண்டு செட்களை இழந்தார்.
    • 5.30 மணி நேரம் நடைபெற்ற ஆட்டத்தில் அல்காரஸ் போராடி வெற்றி பெற்றார்.

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டிகள் இன்று நடைபெற்றன. முதல் போட்டியில் 1-ம் நிலை வீரரான ஸ்பெயினைச் சேர்ந்த அல்காரஸும், 3-ம் நிலை வீரரான ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்வெரேவும் மோதினர்.

    * முன்னணி வீரர்கள் இருவரும் மோதியதால் ஆட்டத்தில அனல் பறந்தது. முதல் செட்டை 6-4 என அல்காரஸ் எளிதாக கைப்பற்றினார்.

    * 2-வது செட்டில் ஸ்வெரேவ் கடும் சவால் விடுத்தார். இதனால் போட்டி டை-பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் அல்காரஸ் 7(7)-6(3) எனக் கைப்பற்றினார்.

    * 3-வது செட்டை கைப்பற்றினால் ஸ்வெரேவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடலாம் என்ற நோக்கத்தில் அல்காரஸ் களம் இறங்கினார். ஆனால், ஸ்வெரேவ் அதற்கு கடும் பதிலடி கொடுத்தார். 3-வது செட்டும் டை-பிரேக் வரை சென்றது. இந்த முறை ஸ்வெரேவ் 7(7)-6(3) எனக் கைப்பற்றினார்.

    * அதோடு 4-வது செட்டிலும் இருவரும் மல்லுக்கட்டினர். இதனால் இந்த செட்டும் டை-பிரேக்கர் வரை சென்றது. இறுதியாக ஸ்வெரேவ் இந்த செட்டையும் 7(7)-6(4) எனக் கைப்பற்றி போட்டியை நீட்டித்தார்.

    * இருவரும் தலா இரண்டு செட்களை கைப்பற்றிய நிலையில், வெற்றியை தீர்மானிக்கும் 5-வது செட்டில் களம் இறங்கினர்.

    * 5-வது செட்டை அல்காரஸ் சர்வீஸ் உடன் தொடங்கினார். முதல் கேமில் அல்காரஸ் சர்வீஸை முறியடித்து ஸ்வெரேவ் வெற்றி பெற்றார்.

    * ஸ்வெரேவ் 2-வது கேமில் சிறப்பாக சர்வீஸ் செய்து அதை கைப்பற்றினார். இதனால் ஸ்வெரேவ் 2-0 என முன்னிலை வகித்தார்.

    * 3-வது கேமில் அல்காரஸ் சிறப்பாக சர்வீஸ் செய்து அதை தனதாக்கினார். இதனால் அல்காரஸ் 1-2 என பின்தங்கியிருந்தார்.

    * 4-வது கேமில் ஸ்வெரேவ் சர்வீஸ் செய்தார். இதை ஸ்வெரேவ் கஷ்டப்பட்டு தனதாக்கினார். இதனால் 3-1 ஸ்வெரேவ் முன்னிலைப் பெற்றார்.

    * 4-வது கேமில் அல்காரஸ் சர்வீஸ் செய்தார். இந்த கேம் ஏஸ் வரை சென்றது. இறுதியில் அல்காரஸ் தனதாக்கினார். இதனால் 2-3 என பின்தங்கினார்.

    * 6-வது கேமில் ஸ்வெரேவ் சர்வீஸ் செய்தார். இதை ஸ்வேரேவ் தனதாக்க 4-2 முன்னிலைப் பெற்றார்.

    * 7-வது கேமை அல்காரஸ் 40-15 என எளிதாக தனதாக்கினார். இதனால் அல்காரஸ் 3-4 என பின்தங்கியிருந்தார்.

    * 8-வது கேமை ஸ்வெரேவ் சர்வீஸ் உடன் தொடங்கினார். இதை ஏஸ் வரை சென்றாலும் ஸ்வெரேவ் அட்டகாசமாக தனதாக்கினார். இதனால் 5-3 என ஸ்வெரேவ் முன்னிலைப் பெற்றார்.

    * அடுத்த இரண்டு செட்களில் ஒன்றை கைப்பற்றினால் 5-வது செட்டை ஸ்வெரேவ் கைப்பற்றிவிடுவார் என்ற நிலை இருந்தது.

    * 9-வது கேம்மை அல்காரஸ் சர்வீஸ் உடன் தொடங்கினார். இதை அவர் தனதாக்க 4-5 என பின்தங்கினார்.

    * 10-வது கேமை ஸ்வெரேவ் தொடங்கினார். இதை தனதாக்கினால் 5-வது மற்றும் கடைசி செட்டை கைப்பற்றி வெற்றி வாகை சூடிவிடலாம் என்ற நிலை இருந்து.

    * ஆனால் இங்கு திருப்புமுனை ஏற்பட்டது. ஸ்வெரேவ் சர்வீஸை அல்காரஸ் சிறப்பாக எதிர்கொண்டார். ஸ்வெரேவ் 30-40 என்ற நிலையில் சர்வீஸை முறியடித்தை கேமை தனதாக்கினார். இதனால் அல்காரஸ் 5-5 என சமன் பெற்றார்.

    * 11-வது கேம்மை அல்காரஸ் சர்வீஸ் உடன் தொடங்கினார். இதை 40-15 என எளிதாக தனதாக்க அல்காரஸ் 6-5 என முன்னிலைப் பெற்றார்.

    * 12-வது கேம்மை ஸ்வெரேவ் சர்வீஸ் உடன் தொடங்கினார். ஆனால் அல்காரஸ் அட்டகாசமாக இந்த கேம்மை கைப்பற்றினார்.

    இதனால் அல்காரஸ் 6-4, 7(7)-6(3), 6(3)-7(7), 6(4)-7(7), 7-5 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    Next Story
    ×