என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் அல்காரஸ்
    X

    மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் அல்காரஸ்

    • மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
    • ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மாண்டே கார்லோ:

    மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், பிரான்சின் ஆர்தர் பில்ஸ் உடன் மோதினார்.

    இதில் 6-4 என முதல் செட்டை ஆர்தர் பில்ஸ் வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட அல்காரஸ் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இன்று மாலை நடைபெறும் அரையிறுதியில் அல்காரஸ், சகநாட்டு வீரரான டேவிடோவிச் உடன் மோதுகிறார்.

    Next Story
    ×