என் மலர்
விளையாட்டு

சர்வதேச ஆக்கி சம்மேளன தலைவராக தய்யூப் இக்ராம் தேர்வு- ஆக்கி இந்தியா அமைப்பு வாழ்த்து
- உங்கள் தொலைநோக்கு தலைமை ஆக்கியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது.
- உலகளவில் ஆக்கியை வலுப்படுத்துவதில் ஒன்றாக வேலை செய்ய எதிர்நோக்குகிறோம்.
சர்வதேச ஆக்கி சம்மேளனத்தின் 49-வது நிர்வாக குழு கூட்டம் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்றது. மக்காவுவை சேர்ந்த தய்யூப் இக்ராம் சர்வதேச ஆக்கி சம்மேளனத்தின் தலைவராக மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஆக்கி இந்தியா அமைப்பு வாழ்த்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆக்கி இந்தியா அமைப்பின் பொருளாளரும், தமிழ்நாடு ஆக்கி அமைப்பின் தலைவருமான சேகர் ஜே. மனோகரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
அடுத்த 8 ஆண்டுகளுக்கு சர்வதேச ஆக்கி சம்மேளனத்தின் தலைவராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஆக்கி இந்தியா வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. உங்கள் தொலைநோக்கு தலைமை ஆக்கியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது, மேலும் உங்கள் தொடர் வழிகாட்டுதலின் கீழ் இந்த விளையாட்டு மேலும் செழிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் முழு ஆதரவையும் உறுதி அளிக்கிறோம். உலகளவில் ஆக்கியை வலுப்படுத்துவதில் ஒன்றாக வேலை செய்ய எதிர்நோக்குகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






