search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    உலக சாம்பியனை வீழ்த்திய பிரக்யானந்தா... இந்தியாவின் நம்பர் 1 இடத்தை பிடித்தார்
    X

    உலக சாம்பியனை வீழ்த்திய பிரக்யானந்தா... இந்தியாவின் நம்பர் 1 இடத்தை பிடித்தார்

    • உலக அரங்கில் எனது நாடு சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்வதில் நான் மிகுந்த அக்கறை கொண்டுள்ளேன்.
    • பிரக்யானந்தாவின் திறமை மற்றும் முன்னேறிய வேகம் குறித்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம் என்று அதானி கூறியுள்ளார்.

    பிரக்யானந்தா டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் போட்டியில் உலக சாம்பியனான டிங் லிரனை வீழ்த்தி இந்தியாவின் நம்பர் 1 ஆனார்.

    கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்யானந்தா முதன்முறையாக மூத்த சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்தை முந்தி இந்தியாவின் முதல் தரவரிசையில் உள்ள ஆடவர் சதுரங்க வீரர் என்ற இடத்தை பிடித்தார். இதையடுத்து டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் போட்டியின் நான்காவது சுற்றில் தற்போதைய உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரனை தோற்கடித்த பிரக்யானந்தா இந்தியாவின் நம்பர் 1 என்ற இடத்தை பிடித்து சாதனையை படைத்துள்ளார்.

    அதானி குழுமத்தின் தலைவரான கவுதம் அதானி, செஸ் வீரரான பிரக்யானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.



    அதானி கூறியதாவது, "பிரக்யானந்தாவின் திறமை மற்றும் முன்னேறிய வேகம் குறித்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். அவர் நிச்சயமாக அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு உதாரணம். தேசத்தை பெருமைப்படுத்துவதிலும், உயர்ந்த இடங்களில் பாராட்டுகளை வெல்வதையும் விட உன்னதமானது எதுவுமில்லை. மேலும் விளையாட்டு வீரர்களின் பயணத்தில் துணையாய் நிற்பதில் அதானி குழுமம் அர்ப்பணிப்புடன் உள்ளது" என்றார்.

    இந்த பதிவுக்கு பிரக்யானந்தா, உலக அரங்கில் எனது நாடு சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்வதில் நான் மிகுந்த அக்கறை கொண்டுள்ளேன். நான் விளையாடும் போதெல்லாம், நாட்டுக்காக அதிக பதக்கங்களை வெல்வதே எனது ஒரே குறிக்கோள். எனது திறமைகளை நம்பியதற்காக அதானி குழுமத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" என்று கூறினார்.

    Next Story
    ×