என் மலர்
விளையாட்டு

ஆசிய கோப்பை: போட்டி முடிந்ததும் இலங்கை வீரருக்கு காத்திருந்த அதிர்ச்சி தகவல்
- இலங்கை அணி குறைந்தது 3 போட்டிகளில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
- துனித் வெல்லாலகே 31 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற லீக் சுற்றில் இலங்கை- ஆப்கானிஸ்தான அணிகள் மோதின. இதில் ஆப்கானிஸ்தானை வெளியேற்றி இலங்கை அணி சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெற்றது. சூப்பர்4 சுற்றுக்கு தகுதி இலங்கை அணி தகுதி பெற்றதை தொடர்ந்து வீரர்கள் உற்சாக மிகுதியில் இருந்தனர்.
அந்நேரத்தில், இலங்கை வீரர் துனித் வெல்லாலகேவின் தந்தை சுரங்கா வெல்லலகே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த தகவல் அறிந்து அனைவரும் சோகத்தில் மூழ்கினர். தந்தை இறந்த துக்கச் செய்தி தெரியவர துனித் கண்கலங்கியபடி Dressing Room-க்கு சென்றார். அவரை சகவீரர்கள் ஆறுதல்படுத்தினர்.
இதையடுத்து துனித் வெல்லாலகே வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். இதனால் அவர் ஆசியக் கோப்பை தொடரில் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இன்னும் இலங்கை அணி குறைந்தது 3 போட்டிகளில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
துனித் வெல்லாலகே 31 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆகஸ்ட் 2024 இல் கொழும்பில் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 27 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதே அவரது சிறந்த சாதனையாகும். 2023 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 40 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.






