search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    புரோ கபடி லீக்: அரியானா அணிக்கு 6-வது வெற்றி
    X

    புரோ கபடி லீக்: அரியானா அணிக்கு 6-வது வெற்றி

    • அரியானா 33-23 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.
    • இன்றைய போட்டியில் மும்பை-பெங்கால், புனே-தெலுங்கு டைட்டன்ஸ், உ.பி. யோதா-பாட்னா அணிகள் மோதுகின்றன.

    ஐதராபாத்:

    புரோ கபடி லீக் போட்டி தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் டெல்லி அணி 50-47 என்ற கணக்கில் குஜராத்தை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 26-41 என்ற கணக்கில் ஜெய்ப்பூர் அணியிடம் தோற்றது. தமிழ் தலைவாஸ் 7-வது தோல்வியை தழுவியது.

    நேற்று நடந்த கடைசி ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ்-பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. இதில் அரியானா 33-23 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. அரியானா அணி பெற்ற 6-வது வெற்றியாகும். பாட்னா 7-வது தோல்வியை தழுவியது.

    புனே அணி 64 புள்ளியுடன் முதல் இடத்திலும், ஜெய்ப்பூர் 59 புள்ளியுடன் 2-வது இடத்திலும், பெங்களூரு 58 புள்ளியுடன் 3-வது இடத்திலும் உள்ளன. உ.பி. யோதா, டெல்லி (தலா 50 புள்ளிகள்) பெங்கால் வாரியர்ஸ், தமிழ் தலைவாஸ் (தலா 48 புள்ளி) ஆகியவை முறையே 4 முதல் 7-வது இடங்களில் உள்ளன.

    இன்றைய போட்டியில் மும்பை-பெங்கால், புனே-தெலுங்கு டைட்டன்ஸ், உ.பி. யோதா-பாட்னா அணிகள் மோதுகின்றன.

    Next Story
    ×