என் மலர்
விளையாட்டு

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: கலப்பு இரட்டையரில் இந்திய ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது
- மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
- இதில் கலப்பு இரட்டையரில் இந்திய ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.
கோலாலம்பூர்:
மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடந்த கலப்பு இரட்டையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-துருவ் கபிலா ஜோடி, பிரான்சின் லியா பலெர்மோ-ஜூலியன் மயோ ஜோடியுடன் மோதியது.
இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 21-17, 18-21, 21-15 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.
ஏற்கனவே, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
Next Story






