என் மலர்tooltip icon

    விளையாட்டு

    நார்வே செஸ் தொடர்: 7-வது முறையாக பட்டத்தை வென்றார் கார்ல்சன்
    X

    நார்வே செஸ் தொடர்: 7-வது முறையாக பட்டத்தை வென்றார் கார்ல்சன்

    • ஒவ்வொரு வீரரும், மற்றவர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும்.
    • கார்ல்சன் சிறப்பாக விளையாடி 7-முறையாக பட்டம் வென்றுள்ளார்.

    நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அந்நாட்டில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. நடப்பு உலக சாம்பியனான தமிழக வீரர் குகேஷ் உள்பட 6 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஒவ்வொரு வீரரும், மற்றவர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும். இதில் அதிக புள்ளிகளை பெற்று முதல் இடம் பிடிக்கும் வீரர் வெற்றி பெற்றவராவார்.

    இந்த நிலையில், இறுதி சுற்று போட்டியில் கார்ல்சன் (நார்வே) சிறப்பாக விளையாடி 7-முறையாக பட்டம் வென்றுள்ளார். இறுதி சுற்று போட்டியில் கார்ல்சனை விட அதிக புள்ளிகளை பெற வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்க வீரர் பாபியானோ கருணாவை எதிர்த்து விளையாடிய குகேஷ் 3-வது இடத்தை பெற்றார். இறுதி சுற்றில் குகேஷ் வெற்றி பெற்று இருந்தால் 3 புள்ளிகள் பெற்று 17.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்திருப்பார். பாபியானோ கருணா 2-வது இடத்தில் உள்ளார்.



    10 சுற்று போட்டிகளின் முடிவில் 16 புள்ளிகளுடன் கார்ல்சன் முதலிடமும், பாபியானோ கருணா 15.5 புள்ளிகளுடன் 2-வது இடமும், குகேஷ் 14.5 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளனர்.

    நார்வே செஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை நூலிழையில் தவறவிட்ட குகேஷ் மனமுடைந்து காணப்பட்டார்.

    Next Story
    ×