search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஊதிய முரண்பாடு: பிஎஸ்ஜி-யின் ஒப்பந்த புதுப்பிப்பு வாய்ப்பை நிராகரித்த லியோனல் மெஸ்சி
    X

    ஊதிய முரண்பாடு: பிஎஸ்ஜி-யின் ஒப்பந்த புதுப்பிப்பு வாய்ப்பை நிராகரித்த லியோனல் மெஸ்சி

    • பிஎஸ்ஜி அணியின் புதிய நிபந்தனைகளை தம்மால் ஒப்புக்கொள்ள முடியாது என்றே மெஸ்ஸி கூறியுள்ளார்.
    • பிஎஸ்ஜி அணியை பொறுத்தமட்டில் ஊதியத்தை குறைத்துக் கொள்ள கட்டாயப்படுத்துவதாக கூறப்படுகிறது.

    பிரான்சின் பிஎஸ்ஜி அணியுடனான ஒப்பந்தம் புதுப்பிக்காத நிலையில் அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸியின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது என கூறப்படுகிறது.

    ஊதியம் தொடர்பாக இருதரப்புக்கும் இடையே முரண்பாடு நீடிப்பதால், பிஎஸ்ஜி அணியுடனான ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பிஎஸ்ஜி அணியில் இணைந்த பின்னர் மொத்தம் 28 ஆட்டங்களில் 17 கோல்கள் விளாசியுள்ள மெஸ்ஸி, 16 கோல் வாய்ப்புகளை உருவாக்கி சக வீரர்களுக்கு உதவியுள்ளார்.

    தமது கால்பந்து வாழ்க்கையை சமீப மாதங்களாக கொண்டாடிவரும் மெஸ்ஸி, 2022 ஆம் ஆண்டின் ஃபிபா கால்பந்து உலகக் கோப்பையையும் கைப்பற்றினார். கத்தார் உலகக் கோப்பைக்கு முன்னர் பிஎஸ்ஜி அணியுடன் ஓராண்டுக்கான ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்திருந்தார் மெஸ்ஸி.

    ஆனால் பிஎஸ்ஜி அணியின் புதிய நிபந்தனைகளை தம்மால் ஒப்புக்கொள்ள முடியாது என்று மெஸ்ஸி கூறியுள்ளார். பிஎஸ்ஜி அணியை பொறுத்தமட்டில் ஊதியத்தை குறைத்துக் கொள்ள கட்டாயப்படுத்துவதாக கூறப்படுகிறது.

    தற்போது அவர் ஆண்டுக்கு 34.84 மில்லியன் பவுண்டுகள் ஊதியமாக பெற்று வருகிறார். மேலும், புதிய ஒப்பந்தம் தொடர்பில் பிஎஸ்ஜி அணி முன்வைத்த நிபந்தனைகளும் மெஸ்ஸியால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

    இதனிடையே, மெஸ்ஸியின் தந்தை பார்சிலோனா அணியுடனான பேச்சுவார்த்தையை முன்னெடுத்திருந்தார். இந்த நிலையில் தான் மெஸ்ஸியின் எதிர்காலம் தொடர்பில் ரசிகர்களிடையே கவலை எழுந்துள்ளது.

    Next Story
    ×