என் மலர்
விளையாட்டு

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் லக்ஷயா சென் #LakshyaSen
- ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது.
- இந்தியாவின் லக்ஷயா சென் அரையிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.
பெர்மிங்காம்:
ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் இங்கிலாந்தில் இன்று தொடங்கியது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், கனடாவின் விக்டர் லாய் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் முதல் செட்டை 21-16 என வென்றார். இதற்கு பதிலடியாக கனடா வீரர் 21-13 என 2வது செட்டை கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் அதிரடியாக ஆடிய லக்ஷயா சென் 21-15 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.
Next Story






