என் மலர்
விளையாட்டு

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி: 2-வது வெற்றி ஆர்வத்தில் இந்தியா: ஓமனுடன் இன்று மோதல்
- இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் சிலி 7-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
- ஓமன் அணி முதல் ஆட்டத்தில் 0-4 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்திடம் தோற்றது.
சென்னை:
14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி சென்னை, மதுரையில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. டிசம்பர் 10-ந்தேதி வரை இந்த ஹாக்கி திருவிழா நடக்கிறது.
இந்த போட்டியில் 24 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. 2 முறை சாம்பியனான இந்திய அணி (2001, 2016) 'பி' பிரிவில் உள்ளது.சுவிட்சர்லாந்து, சிலி, ஓமன் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் இடம் பெற்று பெற்றுள்ளன.
இந்திய அணி நேற்றைய தொடக்க ஆட்டத்தில் சிலியை எதிர்கொண்டது. இதில் 7-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
ரோகித் தலைமையிலான இந்திய ஜூனியர் ஹாக்கி அணி 2-வது ஆட்டத்தில் ஓமனை சந்திக்கிறது. இன்று இரவு 8 மணிக்கு எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இந்தப் போட்டி நடக்கிறது. ஓமனை வீழ்த்தி இந்திய அணி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. ஓமன் அணி முதல் ஆட்டத்தில் 0-4 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்திடம் தோற்றது.
நேற்று நடந்த மற்ற ஆட்டங்களில் பெல்ஜியம் 12-1 என்ற கோல் கணக்கில் நமீபியாவையும், ஸ்பெயின் 8-0 என்ற கணக்கில் எகிப்தையும் (டி பிரிவு) நியூசி லாந்து 5-3 என்ற கணக்கில் சீனாவையும் , அர்ஜென்டினா 4-1 என்ற கணக்கில் ஜப்பானையும் (சி), அயர்லாந்து 4-3 என்ற கணக்கில் கனடாவையும், ஜெர்மனி 4-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவையும் (எ) தோற்கடித்தன.






