என் மலர்
விளையாட்டு

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: ஆஸ்திரேலியா - ஜப்பான் இன்று மோதல்
- 8 அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன.
- மற்ற அணிகள் 9 முதல் 24-வது இடத்துக்கான ஆட்டங்களில் விளையாடும்.
சென்னை:
14-வது ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் மற்றும் மதுரை ரேஸ்கோர்சில் உள்ள சர்வதேச ஹாக்கி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதின. லீக் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி (ஏ), இந்தியா (பி), அர்ஜென்டினா (சி), ஸ்பெயின் (டி), நெதர்லாந்து (இ), பிரான்ஸ் (எப்) ஆகியவை தங்கள் பிரிவில் முதலிடம் பிடித்தும், 2-வது இடம் பிடித்த இரண்டு சிறந்த அணிகளான நியூசிலாந்து (சி), பெல்ஜியம் (டி) என 8 அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன. மற்ற அணிகள் 9 முதல் 24-வது இடத்துக்கான ஆட்டங்களில் விளையாடும்.
இந்த போட்டி தொடரில் நேற்று ஓய்வு நாளாகும். இன்று மதுரையில் நடைபெறும் 17 முதல் 24-வது இடத்தை நிர்ணயிப்பதற்கான ஆட்டங்களில் நமிபியா-ஆஸ்திரியா (காலை 9 மணி), வங்காளதேசம்-ஓமன் (காலை 11.30 மணி), தென்கொரியா-எகிப்து (பிற்பகல் 2 மணி), சீனா-கனடா (மாலை 4.30 மணி) அணியும், சென்னையில் நடைபெறும் 9 முதல் 16-வது இடத்தை தீர்மானிப்பதற்கான ஆட்டங்களில் இங்கிலாந்து- சிலி (பகல் 12.30 மணி), தென்ஆப்பிரிக்கா- மலேசியா (பிற்பகல் 3 மணி), சுவிட்சர்லாந்து- அயர்லாந்து (மாலை 5.30 மணி), முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியா -ஜப்பான் (இரவு 8 மணி) அணியும் மோதுகின்றன.






