என் மலர்tooltip icon

    விளையாட்டு

    உலகக் கோப்பை செஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் உஸ்பெகிஸ்தான் வீரர்
    X

    உலகக் கோப்பை செஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் உஸ்பெகிஸ்தான் வீரர்

    • கோவாவில் செஸ் உலகக் கோப்பை நடைபெற்றது.
    • இந்தத் தொடரில் வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் நடந்தது.

    கோவா:

    11-வது உலகக் கோப்பை செஸ் தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் சீனாவின் வெய் யீ, உஸ்பெகிஸ்தானின் ஜவோகிர் சிந்தரோவ் இடையிலான இறுதிச்சுற்றின் முதலாவது ஆட்டம் சமனில் முடிந்தது. இதன் 2-வது ஆட்டமும் சமனில் முடிந்தது.

    இந்நிலையில், வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் நடந்தது.

    இறுதிப்போட்டியின் டை பிரேக்கரில் சீன வீரர் வெய் யீயை உஸ்பெகிஸ்தான் வீரர் ஜவோகிர் வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார்.

    ஜவோகிர் சிந்தரோவ் தனது 19 வயதில் உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.

    ரஷியாவின் ஆந்த்ரே இசிபென்கோ 2-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் யாகுபோவை வீழ்த்தி 3-வது இடம் பிடித்தார்.

    Next Story
    ×