என் மலர்
விளையாட்டு

2030 குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்றது பிரான்ஸ்
- பாரீஸ் 2024 ஒலிம்பிக்ஸ் போட்டி வெற்றிகரமாக இருக்கும்.
- குளிர்கால ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளுக்கும் இது பொருந்தும்- மேக்ரான்.
பிரான்ஸ் நாட்டின் பிரபலமான ஆல்ப்ஸ் 2030 குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்றுள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் பிரான்ஸ் அரசு வருகிற அக்டோபர் மாதம் 1-ந்தேதிக்குள் நிதி மற்றும் உத்தரவாதம் தொடர்பான உத்தரவாதம் அளிக்க வேண்டும். பிரான்ஸ் பாராளுமன்றத்தில் அதற்கான ஒப்புதலை மார்ச் 1-ந்தேதிக்குள் பெற வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது.
2034 குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பை அமெரிக்காவின் சால்ட் லேக் நகர் பெற்றுள்ளது.
2024 ஒலிம்பிக் போட்டி பாரீஸ் நகரில் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்வதில் பிரான்ஸ் அரசின் முழு அர்ப்பணிப்பை நான் மீண்டும் உறுதிப்படுத்துகிறேன். பாரீஸ் 2024 ஒலிம்பிக்ஸ் போட்டி வெற்றிகரமாக இருக்கும். மேலும் 2030-ல் குளிர்கால ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளுக்கும் இது பொருந்தும் என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
மேலும், "நீங்கள் எங்களை நம்பலாம். 2030 குளிர்கால ஒலிம்பிக் மற்றும் குளிர்கால பாராலிம்பிக் விளையாட்டுகளுக்கான இந்த வேட்புமனுவை ஆதரிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்" என்றார்.
2030 குளிர்கால போட்டியை நடத்த பிரான்ஸ் தவிர மற்ற நாடுகள் போட்டியிடவில்லை. என்றாலும் ஆல்ப்ஸில் நடத்த வேண்டாம் என நான்கு ஐஓசி உறுப்பினர் நாடுகள் வாக்களித்தன. ஏழு நாடுகள் நடுநிலை என வாக்களித்தன. மொத்தம் 95 உறுப்பின நாடுகள் வாக்களித்தன.






