என் மலர்
விளையாட்டு

வீடியோ: ஆசிய தடகள போட்டி: தங்கம் வென்று அசத்திய இந்திய வீரர் குல்வீர் சிங்
- ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.
- பந்தய தூரத்தை 28:38.63 என்ற நேரத்தில் கடந்து தங்கப்பதக்கத்தை குல்வீர் சிங் வென்றார்.
26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் குமி நகரில் இன்று முதல் 31-ந் தேதி வரை நடக்கிறது. 43 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இதில் 59 பேர் கொண்ட இந்திய அணியும் அடங்கும்.
இந்நிலையில் முதல் நாளான இன்று ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் இந்திய வீரர் குல்வீர் சிங் கலந்து கொண்டார். கடைசி சுற்றுக்கு முந்தைய சுற்று வரை 4-வது இடத்தில் இருந்த குல்வீர், கடைசி சுற்றில் வேகத்தை அதிகப்படுத்தினார். இதனால் இந்த ஓட்டப்பந்தயத்தில் குல்வீர் சிங் முதல் இடம் பிடித்தார். அவர் பந்தய தூரத்தை 28:38.63 என்ற நேரத்தில் கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார்.
பாங்காக்கில் நடந்த கடந்த (2023) ஆசிய போட்டியில் இந்தியா 6 தங்கம், 12 வெள்ளி உள்பட 27 பதக்கங்கள் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story






