என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
கூடைப்பந்து போட்டியில் 27 ஆண்டுக்கு பிறகு கஜகஸ்தானை வீழ்த்திய இந்தியா
- ஆசிய கோப்பை கூடைப்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.
- ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும்.
சென்னை:
சவுதி அரேபியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஆசிய கோப்பை கூடைப்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்டுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும்.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக ஆசிய போட்டிக்கு தகுதி பெறும். 'இ' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணியின் 4-வது தகுதி சுற்று ஆட்டம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் உலக தரவரிசையில் 76-வது இடத்தில் இருக்கும் இந்தியா, 69-வது இடத்தில் உள்ள கஜகஸ்தானுடன் மோதியது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் கால்பகுதியில் 9-18 என்ற புள்ளி கணக்கில் பின்தங்கி இருந்த இந்திய அணி சரிவில் இருந்து மீண்டதுடன் அபாரமாக செயல்பட்டு தனது முன்னிலையை அதிகரித்தது. முடிவில் இந்திய அணி 88-69 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை சுவைத்தது.
இந்திய அணியில் பிரின்ஸ், கன்வார் சந்து தலா 17 புள்ளியும், அமய்ஜோத் சிங் 15 புள்ளியும், சஹாய் செகோன் 12 புள்ளியும் சேர்த்தனர். கடந்த 27 ஆண்டுகளில் கஜகஸ்தானுக்கு எதிராக இந்திய அணி பெற்ற முதல் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.