search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கிழக்காசியாவின் முதல் ஹைபிரிட் மைதானம்... மாமல்லபுரம் அருகே கால்பந்து அகாடமியை தொடங்கிய எப்சி மெட்ராஸ்
    X

    இரவில் மின்னொளி வெளிச்சத்தில் விளையாடும் இளம் கால்பந்து வீரர்கள்.

    கிழக்காசியாவின் முதல் ஹைபிரிட் மைதானம்... மாமல்லபுரம் அருகே கால்பந்து அகாடமியை தொடங்கிய எப்சி மெட்ராஸ்

    • விடுதி, உணவகம், டிஜிட்டல் வகுப்பறை, உடற்பயிற்சி மையம், மருத்துவமனை என சகல வசதிகளும் உள்ளன.
    • இயற்கை, செயற்கை மற்றும் ஹைபிரிட் என மூன்று கால்பந்து மைதானங்கள் உள்ளன.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி பகுதியில், இந்தியா மற்றும் ஆசிய கால்பந்தாட்ட கூட்டமைப்புகளின் தரநிலை பரிந்துரையின் கீழ் 23 ஏக்கர் நிலப்பரப்பில், இரவிலும் விளையாடும் வகையில் சர்வதேச தர கால்பந்து அகாடமியை "எப்.சி மெட்ராஸ்" என்ற நிறுவனம் துவங்கி உள்ளது.

    இதில் 130 பேர் தங்கி பயிற்சி பெறும் வகையில் விடுதி, உணவகம், டிஜிட்டல் வகுப்பறை, கருத்தரங்க கூடம், உடற்பயிற்சி மையம், மருத்துவமனை, கால்பந்து மைதானங்கள் உள்ளிட்ட சகல வசதிகளும் உள்ளன. இயற்கை, செயற்கை மற்றும் ஹைபிரிட் என மூன்று கால்பந்து மைதானங்கள் உள்ளன. இயற்கையான புல்வெளி மைதானமானது, வரையறுக்கப்பட்ட அளவிலான மைதானத்தைவிட 1.5 மடங்கு அதிகம். இது பயிற்சிக்காக பயன்படுத்தப்படும்.

    இங்கு கால்பந்து விளையாட்டு திறனும், ஆர்வமும் உடைய இளம் வீரர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. கிழக்காசியாவின் முதல் ஹைபிரிட் மைதானம் இதுவே என அகாடமியின் நிறுவனர் கிரிஷ் மாத்ருபூதம், இயக்குனர் தனஞ்செய் ஆகியோர் தெரிவித்தனர்.

    Next Story
    ×