INDW vs AUSW | மகளிர் டெஸ்ட்: இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா

முதல் இன்னிங்சில் 198 ரன்கள் அடித்த இந்தியா, 2-வது இன்னிங்சில் 149 ரன்களில் சுருண்டது.ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 323 ரன்கள் குவித்தது.
INDW vs AUSW | மகளிர் டெஸ்ட்: இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா
Published on

இந்தியா- ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் கடந்த 6-ம் தேதி பெர்த்தில் தொடங்கியது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 198 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிகபட்சமாக 52 ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலிய அணி சார்பில் சுதர்லேண்ட் 4 விக்கெட்டுகளும், லூசி ஹாமில்டன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.

பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ் தொடங்கியது. சுதர்லேண்ட் அபாரமாக விளையாடி 129 ரன்கள் குவித்தார். எலிசி பெர்ரி 76 ரன்கள் சேர்த்தார். இதனால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 323 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

பின்னர் 125 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இரண்டாவது இன்னிங்சிலும் இந்திய பேட்டர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிரத்திகா ராவல் மட்டும் தாக்குப்பிடித்து 63 ரன்கள் அடிக்க இந்தியா இரண்டாவது இன்னிங்சில் 149 ரன்னில் சுருண்டது.

ஒட்டுமொத்தமாக இந்தியா 24 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றிருந்ததால், ஆஸ்திரேலியா அணிக்கு வெறும் 25 ரன்கள் மட்டுமே இழக்காத நிர்ணயிக்கப்பட்டது. இதை ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி எளிதாக சேஸிங் செய்து வெற்றி பெற்றது.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை இந்தியா கைப்பற்றியது. அதன் பிறகு ஒரு நாள் தொடரையும், தற்போது டெஸ்ட் போட்டியையும் ஆஸ்திரேலியாவும் வென்றுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com