என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்துக்கு 153 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது ஸ்காட்லாந்து
    X

    டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்துக்கு 153 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது ஸ்காட்லாந்து

    • மைக்கேல் ஜோன்ஸ் 20 பந்தில் 33 ரன்கள் சேர்த்தார்.
    • ரஷித் 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    டி20 உலகக் கோப்பையில் இன்றைய 2-வது போட்டி கொல்த்தாவில் நடைபெற்று வருகிறது. இதில் "சி" பிரிவில் இடம் பிடித்துள்ள இங்கிலாந்து- ஸ்காட்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஸ்காட்லாந்து முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் ஜார்ஜ் முன்சே 6 பந்தில் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மைக்கேல் ஜோன்ஸ் 20 பந்தில் 33 ரன்கள் சேர்த்தார்.

    கேப்டன் ரிச்சி பெரிங்டன் 32 பந்தில் 49 ரன்கள் விளாசினார். டாம் ப்ரூஸ் 24 ரன்களும், அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    ஆலிவர் டேவிட்சன் கடைசி வரை நின்று ஆட்டமிழக்காமல் 15 பந்தில் 20 ரன்கள் அடிக்க அயர்லாந்து 19.4 ஓவரில் 152 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து அணி சார்பில் அதில் ரஷித் 3 விக்கெட் வீழ்த்தினார். ஆர்சச்ர் மற்றும் டாசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    பின்னர் 153 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து பேட்டிங் செய்து வருகிறது.

    Next Story
    ×