என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சச்சின் விக்கெட்டை வீழ்த்த ஊசி, மாத்திரைகளை எடுத்தோம்- அக்தர் ஓபன் டாக்
    X

    சச்சின் விக்கெட்டை வீழ்த்த ஊசி, மாத்திரைகளை எடுத்தோம்- அக்தர் ஓபன் டாக்

    • நாங்கள் இருவருமே கடுமையான முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்தோம்.
    • இது தெரிந்தால் அணியில் இருந்து நீக்கப்படுவோம் என்ற பயத்தில், மூத்த வீரர்களுக்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டோம்.

    பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர். இவர் 1998-99 இந்திய சுற்றுப்பயணத்தின் போது சச்சின் டெண்டுல்கரின் விக்கெட்டை வீழ்த்துவது தொடர்பாக தானும் சக வீரர் சக்லைன் முஷ்டாக்கும் செய்துகொண்ட ரகசிய பந்தயம் குறித்து தற்போது வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய சுற்றுப்பயணத்தின் போது சென்னை மற்றும் டெல்லி போட்டிகளில் சக்லைன் முஷ்டாக் ஏற்கனவே சச்சினை அவுட் செய்திருந்தார். இதனால், சச்சின் விக்கெட்டை நானே எடுப்பேன் என சக்லைன் கூறியபோது, அவரிடம், "இல்லை, இந்த முறை அது என்னுடைய விக்கெட், நான் தான் அவரை வீழ்த்துவேன்" என பந்தயம் வைத்துக் கொண்டோம்.

    அந்தச் சமயத்தில் நாங்கள் இருவருமே கடுமையான முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்தோம். இது தெரிந்தால் அணியில் இருந்து நீக்கப்படுவோம் என்ற பயத்தில், மூத்த வீரர்களுக்குத் தெரியாமல் இருவரும் ரகசியமாக ஊசிகள் மற்றும் மாத்திரைகளை (வலி நிவாரணிகள்) எடுத்துக்கொண்டு விளையாடினோம்.

    1999 கொல்கத்தா ஈடன் கார்டன் டெஸ்ட் போட்டியில், சச்சினை முதல் பந்திலேயே க்ளீன் போல்டு ஆக்கியதன் மூலம் நான் சவாலில் வெற்றி பெற்றேன்.

    என அக்தர் கூறினார்.

    அதே போட்டியில் சச்சின் அக்தர் மீது மோதியதால் சர்ச்சைக்குரிய முறையில் ரன் அவுட் ஆனார். இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் மைதானத்தில் பாட்டில்களை வீசி கலவரத்தில் ஈடுபட்டதும், பின்னர் சச்சின் நேரடியாக வந்து ரசிகர்களை அமைதிப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×