என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஆசிய கோப்பை: கேப்டன் ரஷித் கான் உள்பட 5 சுழற்பந்து வீச்சாளர்கள் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு..!
- ஆப்கானிஸ்தான் "பி" பிரிவில் இடம் பிடித்துள்ளது.
- "பி" பிரிவில் வங்கதேசம், ஹாங்காங், இலங்கை அணிகள் இடம் பிடித்துள்ளன.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது. இந்த தொடருக்கான இந்தியா, பாகிஸ்தான், வங்கதேச அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ரஷித் கான் தலைமையிலான அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷித் கான் உடன் சேர்ந்து மொத்தம் 5 சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர். நூர் அகமது, முஜீப் உர் ரஹ்மான், ஏ.எம். கசான்ஃபர், முகமது நபி ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
வேகப்பந்து வீச்சில் நவீன்-உல்-ஹக், பரூக்கி மற்றும் பரித்த மாலிக் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் குரூப் பி-யில் இடம் பிடித்துள்ளது. இந்த பிரிவில் வங்கதேசம், ஹாங்காங், இலங்கை அணிகள் இடம் பிடித்துள்ளன.
வங்கதேசம் முதல் போட்டிகளில் செப்டம்பர் 9ஆம் தேதி ஹாங்காங்கை எதிர்கொள்கிறது.
ஆப்கானிஸ்தான் அணி விவரம்:-
ரஷித் கான் (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஜத்ரன், தர்விஷ் ரசூலி, செதிக்குல்லா அடல், அஸ்மதுல்லா ஓமர்சாய், கரீம் ஜனத், முகமது நபி, குல்பதின் நைப், ஷரபுதின் அஷ்ரப், முகமது இஷாக், நூர் அகமது, முஜீப் உர் ரஹ்மான், ஏ.எம். கசான்ஃபர், பரித் அகமது மாலிக், பஜல்ஹக் பரூக்கி, நவீன் உல் ஹக்.






