என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    Video ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய மார்னஸ் லபுசேன்..!
    X

    Video ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய மார்னஸ் லபுசேன்..!

    • லபுசேன் அணி 20 போட்டியில் 191 ரன்கள் குவித்தது.
    • லபுசேன் 10 பந்தில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 மேக்ஸ் தொடரில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரரான மார்னஸ் லபுசேன் இறுதிப் போட்டியில ஹாட்ரிக் விக்கெட் வீழத்தி அசத்தினார்.

    அவருடைய ரெட்லேண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்த 191 ரன்கள் குவித்தது, லபுசேன் 10 பந்தில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    பின்னர் 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வேல்லி அணி களம் இறங்கியது. அந்த அணி ஒரு கட்டத்தில் 12 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் 32 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. மேக்ஸ் பிரையன்ட் 38 பந்தில் 76 ரன்களும், ஜெய்டன் டிராபர் 23 பந்தில் 26 ரன்களும் அடிக்க, ரெட்லேண்ட்ஸ் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் பிரையன்ட் 105 ரன்னில் ஆட்டமிழந்த உடன், வேல்லி அணியின் தோல்வி உறுதியானது.

    15ஆவது ஓவரை லபுசேன் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் லபுசேன் விக்கெட் வீழ்த்தினார். அதன்பின் 18ஆவது ஓவரை வீசினார். இந்த ஓவரின் முதல் பந்துகளிலும் அடுத்தடுத்து விக்கெட் கைப்பற்றி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். இதனைத் தொடர்நது ரேட்லேண்ட்ஸ் அணி 41 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தத் தொடரின் தொடக்கத்தில் லபுசேன் சதம் அடித்திருந்தார். பேட்ஸ்மேனாக சிறந்து விளங்கும் லபுசேன், லெக்ஸ்பின் சுழற்பந்து வீச்சில் அசத்தி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    Next Story
    ×