என் மலர்
கிரிக்கெட் (Cricket)

X
மார்க் வுட்டுக்கு அறுவை சிகிச்சை: நான்கு மாதங்கள் கிரிக்கெட்டுக்கு ஓய்வு
By
மாலை மலர்13 March 2025 10:03 PM IST

- இந்தியாவுக்கு எதிராக நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
- இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20-ம் தேதி தொடங்குகிறது.
லண்டன்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மார்க் வுட் காயம் காரணமாக 4 மாதங்கள் எந்த வித போட்டிகளிலும் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அண்மையில் முடிவடைந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின்போது மூட்டு பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.
இந்த காயத்திலிருந்து முழுமையாக மீண்டு வர சுமார் 4 மாத காலம் ஆகும் என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.
Next Story
×
X